இந்தியாவுடனான டி20 போட்டி: இதுதான் எங்கள் இலக்கு! பெரேரா உறுதி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Srilanka cricket, cricket player srilanka, liove score

இந்தியாவுக்கு எதிராக இன்று தொடங்கும் டி20 போட்டியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தால் 150 ஓட்டங்கள் மேல் எடுக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு என பெரேரா கூறியுள்ளார்.

இலங்கை – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கவுள்ளது.

ஒருநாள் போட்டியை இழந்து விட்ட இலங்கை அணி டி20 தொடரை வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த இலங்கை அணித் தலைவர் பெரேரா,

ஒரு நாள் தொடர் எங்களுக்கு மோசமாக அமைந்து விட்டது. ஆனால் முதலாவது ஒரு நாள் போட்டியில் இருந்து நல்ல விடயங்களை கற்றுள்ள நிலையில், டி20 தொடரை சிறப்பாக தொடங்குவோம் என்று நம்புகிறேன்.

இறுதிகட்டத்தில் அபாரமாக பந்து வீசக்கூடிய பவுலர்கள், அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் என்று திறமையானவர்கள் எங்களிடம் உள்ளனர்.

இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குவதால் இரு அணிகளும் பனிப்பொழிவின் தாக்கத்தை சமாளித்தாக வேண்டும்.

நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் 150 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்காக இருக்கும் என பெரேரா கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit