வெளியானது புதிய தரவரிசை: ரோஹித் சர்மா முன்னேற்றம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது, இந்த தரவரிசையில் இந்திய அணியின் தற்காலிக தலைவராக செயல்பட்ட ரோஹித் சர்மா 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

புதிய தரநிலையில் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்,டி வில்லியர்ஸ், டேவிட் வோர்னர் , பாபர் அசாம் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளனர்.

இலங்கையுடனான தொடரில் 3 வது இரட்டை சதத்தை விளாசிய ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 5 வது இடத்தை பிடித்துள்ளார்.

குயிண்டன் டி கோக்,ஜோ ரூட், பிளஸ்சில்,அம்லா, வில்லியம்சன் ஆகியோர் அடுத்த 5 இடங்களை பிடித்துள்ளனர்.

அணிகளுக்கான தரநிலையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2 வது இடத்திலும் நீடிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*