பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ள மஹிந்த ராஜபக்ச!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mahinda-sad-2

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்காக வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிகளவானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதனால் யாரைத் தெரிவது என்பதில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் தெரிவின் போதும் இந்த நிலைமை காணப்படுகின்றது.

யாருக்கும் மனக் கஸ்டம் ஏற்படாத வகையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில பகுதிகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக அறிகின்றோம்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவில் இவ்வாறு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

சீமேந்து, தையல் இயந்திரங்கள் மற்றும் நிதி என்பன வழங்கப்பட்ட போதிலும் இது குறித்து தேர்தல் ஆணைக்குழு கண்டு கொள்ளாதிருக்கின்றது என மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit