அமைதியை நிலைநாட்டுவதற்கு 15000 பொலிஸார் கடமையில்.

பிறப்பு : - இறப்பு :

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு 15000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமானது.

இந்த நிலையில் நாட்டில் அமைதியை பேணுவதற்காக 15000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்திற்கு அமைய நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எந்தவிதமான தேர்தல் பேரணிகள் கூட்டங்களை நடத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேரணி நடத்துவது தொடர்பிலான சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறி பேரணிகள் கூட்டங்களை நடத்தினால் அவர்களை கைது செய்து தேர்தல் முடியும் வரையில் விளக்க மறியலில் வைக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit