58 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்த இலங்கை: ஆட்டத்தையே மாற்றிய இந்தியா

பிறப்பு : - இறப்பு :

மூன்றாவது ஒருநாள் போட்டியில் வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி, ஒரு கட்டத்தில் 58 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால், இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தன, இந்நிலையில் நாண சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன் படி இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக தனுசிகா குணதிலகா-உபுல் தரங்கா களமிறங்கினர்.

குணதிலகா 13 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த சமரவிக்ரமா 42 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிய உபுல் தரங்கா நிலைத்து நின்று, அரைசதம் கடந்தார்.

அதுமட்டுமின்றி தரங்கா ஹர்திக் பாண்ட்யா வீசிய 9-வது ஓவரின் முதல் 5 பந்துகளை தொடர்ந்து 5 பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.

இதனால் இலங்கை அணியின் ரன் விகிதமும் சீரான விகிதத்தில் எகிறியது.

சிறப்பாக ஆடிய தரங்கா 95 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டோனியின் சிறப்பான ஸ்டம்பிங் மூலம் நூலிழையில் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார்.

அதன் பின் வந்த இலங்கை வீரர்கள் மெத்யூஸ்(17), நிரோசன் டிக்வெல்லா(8), அசேல குணரத்னே(17) என அடுத்தடுத்து வெளியேற இலங்கை அணி தடுமாறத் துவங்கியது.

அணியின் தலைவரான திசாரா பெரேரா நம்பிக்கை தருவார் என்று எதிர்பார்த்த போது அவரும் 6 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்ற, இறுதியாக இலங்கை 44.5 ஓவரில் 215 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையு இழந்தது.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் என்று வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி, அடுத்து 58 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக சொதப்பிவிட்டது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சகால் மற்றும் குல்தீப் யாதவ் தல 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியின் ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து 216 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சற்று முன் வரை 1 விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit