வருங்கால பிரித்தானிய இளவரசி மேகனின் முதல் ஊதியம் எத்தனை டொலர் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நடிகை மேகன் முதன் முதலில் 4 டொலர் சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

நடிகை மேகன் தமது இளம்வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Humphrey Yogart நிறுவனத்தில் மணிக்கு 4 டொலர் ஊதியத்தில் பணி புரிந்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் அவர் வாடிக்கையாளர்களிடம் மிகவும் பரிவுடனும் அன்புடனும் நடந்து கொள்வதால் அவர் பாராட்டப்பட்டும் வந்துள்ளார்.

தமது 13 வயதில் குறித்த நிறுவனத்தில் பணி புரிந்த காலகட்டத்தில் தமது அன்பால் வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்துள்ளதாகவும் அவரது முன்னாள் தலைமை நிர்வாகி பாராட்டியுள்ளார்.

மேகன் தொலைக்காட்சிகளில் பிரபலமாவதற்கு முன்னர் பல்வேறு விதமான பணிகளில் ஈடுபட்டு தனித்திறமையுடன் செயல்பட்டுள்ளார்.

மேலும் 2006 ஆம் ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான Deal Or No Deal என்ற நிகழ்ச்சியிளும் முகம் காட்டியுள்ளார் மேகன்.

மிகவும் பிரபலமான காலகட்டத்தில் மேகனின் வயதை கூட குறைத்து சொல்வதற்கு முகவர்கள் நிர்பந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் மேகன் தமது வயதை வெளியே கூறுவதில் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை என அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*