தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடர்வேன்: சீமான் ஆவேசம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

seeman

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்னும் நான்கு நாட்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக மற்றும் திமுகவினரிடையே பணப்பட்டுவாடா தொடர்பாக நேற்று மோதல் வெடித்தது. அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் எழுந்துள்ளதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடரப்படும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit