அதிசக்தி வாய்ந்த மின்சாரம் தாக்கி நபரொருவர் படுகாயம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

electric-shock-lf-600x400

மீகஹகிவுல – பிரதேசத்தில் அதிசக்தி வாய்ந்த மின் வடத்தின் மீது சாய்ந்திருந்த மரமொன்றை வெட்ட முற்பட்ட நபரொருவர் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், இன்றைய தினம்(17) காலை இடம்பெற்றுள்ளது.

மீகஹகிவுல, அக்கலா உல்பத பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் தனது வீட்டுத் தோட்டத்தின் மேலாக செல்லும் அதிசக்தி வாய்ந்த மின் வடத்தின் மீது மரமொன்றின் கிளை சாய்ந்திருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்புக் கருதி அதனை வெட்ட முற்பட்டபோது எதிர்பாராத விதமாக அவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் தற்போது பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit