தேர்தலுக்கு முன்பாகவே ஐந்து சபைகளை இழந்த மஹிந்த!

பிறப்பு : - இறப்பு :

mahinda-sad-400-seithy

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகர­கம நக­ர­சபை உட்­பட ஆறு சபை­க­ளுக்­கான சிறிலங்கா பொது­ஜன ஐக்கிய முன்னணியின் வேட்­பு­ம­னுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்டுள்­ளன.

அத­னால், வேட்­பு­ம­னுத் தாக்கலுக்­குப் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த குழுவை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கடு­மை­யா­கத் திட்­டித் தீர்த்­துள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றுது.

பதுளை, மகி­யங்­கனை, அக­ல­வத்த ஆகிய பிர­தேச சபை­க­ளுக்­கா­க­வும், மகர­கம, பாணந்­துறை, வெலி­கம ஆகிய நகர சபை­க­ளுக்­கா­க­வும் மகிந்த அணி தாக்­கல் செய்­யப்­பட்ட வேட்­பு­ம­னுக்­கள் நேற்­று­முன்­தி­னம் நிரா­க­ரிக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து மாவட்­டப் பொறுப்­பா­ளர்­க­ளுக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­திய மகிந்­த­ரா­ஜ­பக்ச வேட்­பு­மனு நிரா­க­ரிப்­புக்­கான கார­ணத்­தைக் கேட்­ட­றிந்­தார். அதன் பின்­னர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­தி­னார்.

“சிறு சிறு தவ­று­க­ளால்­தான் வேட்­பு­ம­னுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. நீதி­மன்­றத்தை நாடி­னால் நிவா­ர­ணம் கிடைப்­ப­தற்­கு­ரிய வாய்ப்­பி­ருக்­கின்­றது” என்று தினேஷ் கூறி­யுள்­ளார்.

இதற்­குப் பதி­ல­ளித்த மகிந்த, பேரா­சி­ரி­யர் ஜி.எல்.பீரி­ஸி­டம் இது சம்­பந்­த­மா­கப் பேசி தேவை­யான நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit