திருநங்கைகள் ரேஷன் கார்டு, வங்கிக் கடன், பஸ் பாஸ்!

பிறப்பு : - இறப்பு :

திருநங்கைகள் நல கொள்கையை ஆந்திரப் பிரதேச அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.

ஆந்திரப் பிரதேச அரசின் புதிய திருநங்கைகள் நல கொள்கையை அம்மாநில அமைச்சரவை இன்று நிறைவேற்றியது. இதன் கீழ் திருநங்கைகள் பல நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறது.

18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதம் தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும். ரேஷன் கார்டு வழங்கப்படும். பொது இடங்களில் திருநங்கைகளுக்கு தனியாக கழிப்பறைகள் அமைக்கப்படும். அரசு பேருந்துகளில் திருநங்கைகளுக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்படும். அவர்கள் அரசுப் பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க பஸ் பாஸ் வழங்கப்படும். வீட்டுமனை, ஓய்வூதியம் மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியவையும் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டங்களால் திருநங்கைகளுக்கு பொருளாதார நிலைத்தன்மை கொண்ட கண்ணியமான வாழ்க்கையை அவர்கள் மேற்கொள்ளலாம் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்தையும் கோரியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit