வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி.!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி.!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அசோசம் சாலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உள்ளது. வங்கியின் மேலாளராக கோவிந்தராஜன் என்பவரும், நகை மதிப்பீட்டாளராக ஆறுமுகம் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆறுமுகம் கோயிலுக்குச் சென்றுவிட்டதால், வெங்கடேசன் என்பவர் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், நகைகளை அடகு வைத்து பணம் கேட்டுள்ளார். நகைகளை சோதித்த வெங்கடேசன் அதில் போலி நகைகள் இருப்பதையறிந்து, மேலாளர் கோவிந்தராஜிடம் தகவல் அளித்தார். ஆனால், போலி நகைகளை அடகு வைக்க முயன்ற நபர் குறித்து கோவிந்தராஜ் போலீசில் புகார் அளிக்காமல், எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

வங்கியில் மேலும் மோசடி நடந்திருக்கலாம் என சந்தேகமடைந்த மேலாளர் கோவிந்தராஜ், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து வங்கியில் ஆய்வு செய்த அதிகாரிகள், வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளில் ஆயிரத்து 690 சவரன் போலியானவை என்றும், அவற்றை 2 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்திருப்பதும் தெரியவந்தது.

அடகு வைக்கப்பட்டிருந்த போலி நகைகள் அனைத்தையும் அதே பகுதியைச் சேர்ந்த 70 பேர் மாற்றி மாற்றி அடகு வைத்திருந்ததும் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் கோயிலுக்குச் சென்றுவிட்டு பணிக்குத் திரும்பிய ஆறுமுகத்திடம், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் சரியாக பதில் அளிக்காத காரணத்தினால் சந்தேகமடைந்த அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ஆறுமுகம், வங்கியின் நீண்டகால வாடிக்கையாளர் சுசிலா, அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*