கிரிக்கெட் விளையாடும் போதே மாரடைப்பால் உயிரிழந்த இளம் வீரர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கேரளாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் மைதானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கசர்கோட்டில் உள்ள மஞ்சேஸ்வர் மெய்யபடவு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டி நடைப்பெற்றது.

போட்டியின் இறுதி ஓவரை வீசிக் கொண்டிருந்த பத்மநாபா ஜொடுகல்லு (25) என்ற வீரர் மாரடைப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து மைதானத்தில் இருந்த சக வீரர்கள் பத்மநாபாவை தூக்கி கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பத்மநாபா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சோக சம்பவத்தை அடுத்து குறித்த கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*