
அட்லீ தொடர்ந்து ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். இந்நிலையில் இயக்குனர் அட்லீ மீது தொடர்ந்து இவர் பழைய படம் ஒன்றை காப்பியடித்து எடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.
தற்போது பலூன் படத்தின் இயக்குனர் சினிஷ் கூட மறைமுகமாக அட்லீயை தாக்கியுள்ளார், பலூன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது.
அதில் அவர் பேசுகையில் ‘பலூன் படத்தில் பல ஹாலிவுட் படங்களின் பாதிப்பு இருக்கும், இதை நான் ஓபனாக சொல்ல விரும்புகின்றேன்.
ஏனெனில் மௌன ராகம் போல் ஒரு படத்தை எடுத்துவிட்டு நான் மௌன ராகமே பார்க்கவில்லை என்று கூறமுடியாது’ என கூறியுள்ளார்.