பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு: கண்காணிப்பு பட்டியலில் 20,000 பேர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரித்தானியாவில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக முன்னாள் பயங்கரவாத தடுப்பு அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

குறித்த பயங்கரவாத தாக்குதல் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் நடத்தப்படலாம் எனவும் பிரித்தானியாவின் முன்னாள் பயங்கரவாத தடுப்பு அதிகாரி க்றிஸ் ஃபிலிப்ஸ் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

மட்டுமின்றி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது பிரித்தானியாவில் அடிப்படைவாதிகளின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளதாகவும்,

பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் சுமார் 20,000 பேர் உள்ளதாகவும், இது பிரித்தானியவுக்கு விடப்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் இந்த தாக்குதல் நடந்தால் அது வியப்பல்ல எனவும் எவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் சந்தைகளில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது பிரித்தானியாவின் முன்னாள் பயங்கரவாத தடுப்பு அதிகாரி க்றிஸ் ஃபிலிப்ஸ் அதை உறுதி செய்துள்ளது சமூக ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படுள்ளது.

தற்போதைய சூழலில் பொலிசாரால் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ள அவர்,

பயங்கரவாத அச்சுறுத்தலின் தாக்கம் தற்போது மிக எதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்காணிப்பு பட்டியலில் உள்ள 20,000 பேரையும் தொடர்ந்து கண்காணிப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது என கூறும் அவர்,

பொலிசார் சிக்கலான முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அனவும், அதைவிடுத்தால் வேறு வழி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் வெஸ்ட்மின்ஸ்டர், மான்செஸ்டர் அரினா, லண்டன் பிரிட்ஜ் மற்றும் பார்சன்ஸ் கிரீன் ரயில் ஸ்டேஷன் உள்ளிட்ட நான்கு முக்கிய பயங்கரவாத தாக்குதலுக்கு பிரித்தானியா இரையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*