காவலர் பெரிய பாண்டியன் மீது குண்டு பாய்ந்தது எப்படி? அதிர்ச்சியளிக்கும் புதுத் தகவல்

பிறப்பு : - இறப்பு :

மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சக காவலரின் துப்பாக்கி குண்டுக்கே அவர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய் இரவு, ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமை பிடிக்க சென்ற போது மதுரவயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி பலியாகி இருந்தார்.

இவர் மீது பாய்ந்த குண்டு எங்கிருந்து வந்தது? யாருடைய துப்பாக்கியில் இருந்து வெளியானது? போன்ற மர்மம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் பார்கவா வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர், சென்னை பொலிசார் உள்ளே நுழைந்ததும் அவர்கள் மீது தாக்குதல் துவங்கி உள்ளதாகவும் இதில், இருந்து நான்கு பொலிசாரும் தப்பி வெளியே ஓடி விட பெரியபாண்டியன் மட்டும் சிக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

அவர் தாக்கப்படுவதை தடுக்கும் பொருட்டு காவலர் முனிசேகர் தனது துப்பாக்கியை எடுத்த போது அந்த குண்டு தவறுதலாக பெரியபாண்டியன் மீது பாய்ந்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் எஸ்பி தீபக் கூறியுள்ளார்.

இதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறிய தீபக், இரு துப்பாக்கிகள் உட்பட பலதும் தடயவியல் ஆய்வகத்தின் துப்பாக்கி ஆய்வாளர்கள் (Ballistics Experts) ஆய்விற்காக அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவத்தில் நாதுராமின் நண்பரான தேஜாராம்(40), அவரது மனைவியான வித்யா தேவி(35) மற்றும் மகள் சப்னா தேவி(20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று மாலை ஜெய்தாராமின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன. இதில், தேஜாராம் மட்டும் விசாரணைக்காக பொலிஸ் காவலுக்கு அனுபப்பட்டுள்ளார்.

எஞ்சிய இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மொத்தம் ஆறு வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit