எச். ராஜா உள்ளிட்ட 100 பாஜகவினர் கைது

பிறப்பு : - இறப்பு :

விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு எதிராக நாகை மாவட்டத்தில் நேற்று தடையை மீறி ஆர்ப்படாட்டம் நடத்திய எச். ராஜா உள்ளிட்ட 100 பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சிலர், பாஜகவினரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, நேற்று நாகையில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்தார்.

அவரது ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர். இருந்தபோதிலும், எச்.ராஜா உள்ளிட்ட 100 பேர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால், போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறிது நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, வன்முறை சக்திகளுக்கு பயந்து, காவல்துறையினர் தொடை நடுங்கிகளாக உள்ளதாக தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit