குற்றமிழைத்த கணவரை பொலிசில் காட்டிக் கொடுத்த மனைவியின் பரிசுப்பொருள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மும்பையில் மருத்துவர் ஒருவர் செய்த தவறை, அவரின் மனைவி பரிசாக அவருக்கு கொடுத்த கைப்பேசி காட்டி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

மும்பையை சேர்ந்தவர் அஜய் சிங் gynaecologist மருத்துவராக உள்ளார். இவரின் மனைவி சுவேதாவும் dermatologist மருத்துவர் ஆவார். தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் தவறான உறவு இருக்குமோ என்று சந்தேகித்த சுவேதா, ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பம் பொருத்திய கைப்பேசியை, தன் கணவருக்கு பரிசாக அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் திகதி, அஜய் ஒரு பெண்ணுடன் Marine Drive என்னும் இடத்திற்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை அவள் வசிக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

அதன் பின்னர், தானும் அந்த பெண்ணின் வீட்டில் இரவு மட்டும் தங்கி கொள்வதாக கோரியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் தயக்கத்துடன், படுக்கையறைக்கு வெளியே இருக்கும் சோபாவில் தூங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டு, தனது அறைக்கு சென்று தூங்கியுள்ளார்.

அடுத்த சில நேரத்தில் அந்த பெண்ணின் படுக்கையறைக்கு சென்ற அஜய் சிங், மது போதையில் மயக்கத்தில் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்.

மறுநாள் காலையில் எழுந்த அப்பெண், தன்னை யாரோ பாலியல் வன்புணர்வு செய்துள்ளதை உணர்ந்துள்ளார். மேலும், அங்கு அஜய் இல்லாததால் அவருக்கு போன் செய்து இது பற்றி கேட்டுள்ளார்.

ஆனால், அன்றிரவு நடந்த சம்பவத்தை தான் கைப்பேசியில் வீடியோவாக எடுத்துள்ளதாக கூறி அஜய் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இவர்களது உரையாடலை, ஒட்டுக்கேட்கும் கருவி மூலமாக அஜய்யின் மனைவி சுவேதா கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அப்பெண்ணை தொடர்பு கொண்ட சுவேதா, தன் கணவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனைக் கொண்டு அப்பெண்ணிற்கு உதவுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அவரை நம்ப மறுத்த அந்த பெண், நடந்த விடயங்களை தனது தாயாரிடம் கூறி, பொலிசில் அஜய் மற்றும் சுவேதா ஆகிய இருவர் மீதும் புகார் அளித்தார்.

இந்நிலையில், அஜய் சிங் கைது செய்யப்பட்டார். சுவேதா, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அனைத்தையும் விளக்கினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*