கள்ளக்காதலி வீட்டில் சடலமாக கிடந்த அரசியல் பிரமுகர்: குடும்பமே சேர்ந்து கொன்றதா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-17

கள்ளக்காதலி வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (39). இவர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.

ரவிக்குமாருக்கு கவுரி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மைதிலி என்ற பெண்ணிடம் ரவிக்குமார் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர்.

வேலை முடிந்து கவுரி மாலை வீடு திரும்பிய நிலையில், கள்ளக்காதலி மைதிலி வீட்டில் ரவிக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து கவுரி பொலிசுக்கு தகவல் தர அவர்கள் ரவிக்குமாரின் சடலத்தை கைப்பற்றி இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இதனிடையில், கவுரி மற்றும் 200-க்கும் மேற்பட்ட உறவினர்கள் ரவிக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கவுரி அளித்த புகாரில், தன் கணவரின் கள்ளக்காதலி மைதிலி, அவரது தம்பிகள் அலெக்ஸ், அஜித், மற்றும் மைதிலியின் தாய் லட்சுமி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ரவிக்குமார் உடலின் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே அவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit