தாய், தங்கையை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை: காரணம் என்ன?

பிறப்பு : - இறப்பு :

தமிழகத்தில் தாய் மற்றும் தங்கையை கொலை செய்துவிட்டு மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தின் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராமன், கடலூரில் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் இவருக்கு, கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்காக 60 லட்சம் ரூபாய் கட்டுமாறு கூறியுள்ளது.

இதையடுத்து ராஜாராமனின் மகன் ரஞ்சித்குமார் பணத்தை புரட்டுவதற்கு அங்கும் இங்கும் தேடியுள்ளார், ஆனால் பணம் கிடைக்கவில்லை, இதன் காரணமாக ரஞ்சித்குமார் உட்பட அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மிகவும் விரக்தியடைந்த ரஞ்சித், தாய் சுமதி மற்றும் தங்கை வித்யபிரியாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit