காதல் திருமணம் செய்த மகளுக்கு தந்தையின் தண்டனை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழகத்தில் காதல் திருமணம் செய்த மாணவியை மொட்டையடித்து தந்தை சித்ரவதை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை தட்டனூரை சேர்ந்தவர் கண்ணன், இவரது மகள் அபிநயா(வயது 19).

அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் அபிநயாவுக்கு, ஆட்டோ டிரைவரான வெங்கடேஸ்வரன் மீது காதல் ஏற்பட்டது.

இதுபற்றி அபிநயாவின் பெற்றோருக்கு தகவல் தெரியவர, மகளை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 29ம் திகதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதுடன், திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இருவரையும் சமாதானப்படுத்தி பொலிசார் அனுப்பி வைத்த நிலையில், விருதுநகரில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

அபிநயாவுக்கு போன் செய்த உறவினர்கள், மதுரைக்கு வரும்படியும் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதை நம்பி வீட்டுக்கு இருவரும் வந்த நிலையில், அபிநயாவை விட்டுவிட்டு வெங்கடேஸ்வரன் கோயம்புத்தூர் சென்று விட்டார்.

அன்றைய தினம் அபிநயாவை தந்தை உட்பட உறவினர்கள் சித்ரவதை செய்துள்ளனர், மொட்டையும் அடித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த வெங்கடேஸ்வரன் உடனடியாக பொலிசில் புகார் அளித்தார், இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அபிநயாவின் தந்தை உட்பட இருவரை பொலிசார் கைது செய்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*