நாட்டையே பரபரப்பாக்கிய ஆருஷி கொலை வழக்கில் மேல்முறையீடு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arushi58

சிறுமி ஆருஷி கொலை வழக்கில், தல்வார் தம்பதியர் விடுதலையானதை எதிர்த்து, இறந்த ஹேமராஜின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் தம்பதியர்.

இவர்களது 14 வயது மகள் ஆருஷி, கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில், தல்வார் தம்பதியின் வீட்டு வேலைக்காரர் ஹேமராஜின் மீது பொலிசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், அவரும் ஆருஷின் கொலையான இரண்டு நாட்களுக்கு பிறகு, தல்வார் வீட்டின் மாடியில் சடலமாக கிடந்துள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கை, பொலிசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் பின்னர், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் தல்வார் தம்பதியினர் தான் குற்றவாளிகள் என தெரிய வந்ததால், காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

எனினும், தல்வார் தம்பதி அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததின் பெயரில், அதனை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் திகதி தம்பதியை விடுதலை செய்தது.

இந்நிலையில் தல்வார் தம்பதியின் வீட்டு வேலைக்காரர் ஹேமராஜின் மனைவி, அலகாபாத் நீதிமன்றம் அளித்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit