பெற்றோரின் தியாகத்தை நினைத்து கண்ணீர் சிந்திய வீரர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் முதல் சதம் அடித்த இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன், தனது பெற்றோரை நினைத்து கண்ணீர் சிந்தியதாக கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, நேற்று பெர்த் நகரில் தொடங்கியது.

துடுப்பாட்டத்தை துவங்கிய இங்கிலாந்து அணியில், டேவிட் மாலன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாலன் கூறுகையில், ‘இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எனக்காக எனது தாய் தந்தை செய்த எண்ணற்ற தியாகங்களை நினைத்து, அவர்கள் முன்னிலையில் இந்த சதம் அடித்தபோது எனது கண்களில் கண்ணீர் வந்தது உண்மைதான்.

எனக்காக அவர்கள் நேரம் செலவழித்ததற்கு, என்னால் திருப்பி கொடுக்க முடிந்தது இந்த சதம் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தப் போட்டிக்கு வருவதற்கு முன் சற்று அழுத்தத்தில் இருந்தேன். தொடக்கத்தில் இந்த இன்னிங்ஸ் கடினமாக இருந்தது. அதன்பின்னர், என்னை கடினமாக்கிக் கொண்டு ஆடினேன்.

அணிக்கு தேவைப்படும் நேரத்தில் இந்த சதம் அடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு ஒட்டங்கள் குவிப்பேன் என்று நினைக்கவில்லை.

ஆனால், நான் எனது ஆட்டத்தில் சிறிது மாற்றங்களைச் செய்தேன். அதன்படி, 2-3 ஷாட்கள் சதத்தைப் பெற்றுத் தரும் என்று தெரிந்தது. அதனால் கொஞ்சம் முன்கூட்டியே ஷாட்களை தீர்மானித்தேன்.

அவுஸ்திரேலியர்கள் வீசும் வேகத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஆட்டநேர முடிவில் 110 ஒட்டங்கள் குவித்திருந்த மாலன், இன்று 140 ஒட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*