3-வது ஆஷஸ் டெஸ்ட்: அவுஸ்திரேலியா 203 ஓட்டங்கள் குவிப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

aus

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின், அலஸ்டைர் குக் (7), ஸ்டோன்மேன் (56), வின்ஸ் (25), ஜோ ரூட் (20) விரைவில் அவுட் ஆனார்கள். இதனால் இங்கிலாந்து 131 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

5-வது விக்கெட்டுக்குதாவித் மலன் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. தாவித் மலன் சதமும், பேர்ஸ்டோவ் அரைசதமும் அடித்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் இருந்தனர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் குவித்திருந்தது.தாவித் மலன் 110 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 75 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பேர்ஸ்டோவ் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய தாவித் மலன் 140 ரன்களில் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்தது. மலன் அவுட்டான சிறிது நேரத்தில் பேர்ஸ்டோவ் 119 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தாவித் மலன் அவுட்டாகும்போது இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருந்தது.அடுத்து வந்த மொயின் அலி ரன்ஏதும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வோக்ஸ் 8 ரன்னிலும், ஓவர்டன் 2 ரன்னிலும், பிராட் 12 ரன்னிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 403 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கடைசி 6 விக்கெட்டுக்களை 36 ரன்னுக்குள் இழந்து இங்கிலாந்து ரன்குவிக்கும் வாய்ப்பை இழந்தது. ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தொடர்ந்து அவுஸ்திரேலியாமுதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கெமரான் பான்கிராப்ட்,டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர்.

வார்னர் 22 ரன்கள் எடுத்து ஓவர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து பான்கிராப்ட்டும்25 ரன்களில் ஓவர்டன் பந்தில் போல்டாகி வெளியேறினார். அதைத்தொடர்ந்து உஸ்மான் கவாஜாவுடன், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் குவித்தது.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். கவாஜா 50 ரன்கள் எடுத்திருந்தநிலையில் வோக்ஸ் பந்தில் எல்.பி.டபுல்யூ ஆனார். இருப்பினும் ஸ்மித் நிதானமாக விளையாடினார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது.

ஸ்மித் 92 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit