தந்தைக்கு தூக்கு தண்டனை: கவுசல்யா ஆவேச பேட்டி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kowsalya5356

சாதி ஆணவக் கொலைக் குற்றத்திற்காக தூக்கு தண்டனை பெற்றுள்ள தனது தந்தை குறித்து ஆவேசமாக பேட்டியளித்துள்ளார் அவரது மகள் கவுசல்யா.

காதல் திருமணம் செய்து கொண்ட சங்கர்- கவுசல்யா ஜோடியை கவுசல்யாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கடந்தாண்டு உடுமலைப்பேட்டை சாலையில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

கவுசல்யா காதலித்து திருமணம் செய்து கொண்டது ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் என்பதால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மேலும் கவுசல்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தமிழ் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து கவுசல்யாவிடம் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய “உங்கள் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மகளாக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு.

அவரை என் அப்பா என்று நான் கருதவில்லை, தவறு செய்திருக்கிறார், தண்டனை கிடைத்துள்ளது.

தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கின்றனர். எனவே, தண்டனை பெற்றவரை அப்பா என்ற நிலையில் வைத்து யோசித்துப்பார்க்கத் தேவையில்லை என கோபமாக பதிலளித்தார்.

மேலும் சங்கர் கொலை வழக்கில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்.

சங்கர் தனிப்பயிற்சி மையம் நடத்திக் கொண்டிருக்கிறேன், அதை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதே எனது இலக்கு.

சாதி ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை தமிழத்தில் இயற்றுவதற்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit