ரத்தவெள்ளத்தில் கிடந்தவர்களை பார்த்து கதறிய குழந்தை; உருக வைக்கும் காட்சி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தல் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை பார்த்து குழந்தை அழுதுகொண்டிருந்த காட்சி அனைவரையும் உருகவைத்துள்ளது.

பவித்ரன் என்ற பள்ளி மாணவன் தனது அக்கா பிரியாவை தையல் பள்ளியில் கொண்டு சென்றுவிடுவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார், இவர்களுடன் மற்றொரு அக்கா மகளான 3 வயது குழந்தையையும் அழைத்துசென்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் சென்ற ஆலங்கிணறு பாதையில், சின்னத்துரை, சந்திரசேகர் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர், இந்த இரு சக்கர வாகனங்களும் எதிர் எதிரே மோதியதில் அனைவரும் தூக்கிவீசப்பட்டனர்.

இதில், பவித்ரன் மற்றும் சின்னத்துரை ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளனர், மற்றவர்கள் பலத்த காயத்துடன் விழுந்து கிடந்தனர், இவற்றையெல்லாம் பார்த்த 3 வயது குழந்தை ரத்தகாயத்துடன் அவர்களை பார்த்து அழுதுள்ளது.

அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பவித்ரன் மற்றும் சின்னத்துரை ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர், குழந்தை உட்பட மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*