6 பேரால் பாலியல் பலாத்காரம்… 36 மணி நேரம் உயிருக்கு போராடிய பெண்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sexualAbuse

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஹொட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவரை கடத்திச் சென்று 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து கை கால்களை முடமாக்கி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் அனேகல் பகுதியில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. குறித்த பெண் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் ஊர்ந்து வந்து பல மணி நேரமாக ஆடையில்லாமல் படுத்துக் கிடந்துள்ளார்.

தற்போது இந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

நிலநடுக்கம் ஒன்றில் குடும்ப உறுப்பினர்களை இழந்த இப்பெண், தினசரி ஊதிய அடிப்படையில் ஹொட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது குடியிருப்பின் அருகாமையில் உள்ள புதர் மண்டிய பகுதியில் 6 பேர் கொண்ட கும்பலால் இரவு முழுக்க பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி குறித்த பெண்ணின் காலை கல்லால் அடித்து உடைத்துவிட்டு அந்த 6 பேரும் அங்கிருந்து அதிகாலையில் தப்பியுள்ளனர்.

நடக்கவே முடியாத நிலையில் நிர்வாணமாக ஊர்ந்து வந்த அவர் அருகாமையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் முழுவதும் உதவிக்காக எதிர்பார்த்து இருந்துள்ளார்.

அடுத்த நாள் காலையில் குப்பைத் தொட்டியில் கிடந்த துணியை உடலில் சுற்றியபடி அங்கேயே 36 மணி நேரம் கஷ்டப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மட்டுமின்றி தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும் பொலிசாருக்கு புகாராகவும் அளித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit