ஓடும் பேருந்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை !

பிறப்பு : - இறப்பு :

பேருந்தில் இருந்த ரவுடி ஒருவரை மர்ம கும்பல் வெட்டி கொன்றுள்ள சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் பயணம் செய்த ரவுடி ஒருவரை மர்ம கும்பல் ஒன்று சரமரியாக வெட்டி கொலை செய்துள்ளது. ஓடும் பேருந்தை நிறுத்தி கொலையாளிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த அமர் அமரேஷ். இவர் மீது கொலை, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இன்று நண்பகலில் அமரேஷ், அரசுப் பேருந்து மதுரை சென்று கொண்டிருந்தார். பேருந்து வாடிப்பட்டி அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த மர்ம கும்பல் அமரேஷ் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வழி மறித்து நிறுத்தியது.

பேருந்துக்குள் புகுந்த அவர்கள், அமரை கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு, தங்களது வாகனங்களில் ஏறி தப்பியது. இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்த அமர், பேருந்திற்குள்ளேயே உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அமரேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit