சிங்கப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இந்திய இளைஞருக்கு சிறை

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

சிங்கப்பூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய என்ஜினீயருக்கு 3 வாரம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் பிரபு நடராஜன் (33). இவர் சிங்கப்பூரில் சாவோ சாங் பகுதியில் என்ஜினீயராக பணிபுரிகிறார்.

இவர் பேருந்தில் பயணம் செய்த போது 23 வயது பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

இது குறித்து அந்த பெண் பொலிசில் புகார் செய்தார். இதையடுத்து பெண்ணிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், பிரபு வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளது தெரியவந்தது.

இரவில் தூங்கும் போது ஜன்னல் வழியாக கைவிட்டு அவரிடம் பிரபு நடராஜன் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரபுவை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் பிரபுவுக்கு 3 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit