பிச்சைக்காரர்களை கண்டறிந்தால் ரூ.500 பரிசு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிச்சைக்காரர்களை கண்டறிந்தால் ரூ.500 பரிசளிக்கப்படும் என்று தெலுங்கானா சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, தெலுங்கானா சிறைத்துறை நிர்வாகம் சமூக செயல்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, ஐதராபாத்தில் உள்ள பிச்சைக்காரர்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்வில் மேம்பாட்டை ஏற்படச் செய்வதாகும்.

இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, நகர் முழுவதும் உள்ள பிச்சைக்காரர்களை கொண்டு வந்து, சன்சல்குடா மற்றும் செர்லாபள்ளி சிறை வளாகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கு வாழ்க்கை மேம்பட ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதற்கு ஐதராபாத் நகர போலீசார், ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் ஆகியோர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

ஆனந்த் ஆஸிரமம் என்ற பெயரில் நடத்தப்படும் முகாமிற்கு, இதுவரை 316 ஆண் மற்றும் 164 பெண் பிச்சைக்காரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து 261 ஆண் மற்றும் 140 பெண் பிச்சைக்காரர்கள் ஆலோசனைப் பயிற்சிக்கு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இனி பிச்சை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய சிறைத்துறை நிர்வாக இயக்குநர் வி.கே.சிங், ஐதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகராக மாற்ற முடிவு செய்துள்ளோம்.

வரும் டிசம்பர் 25ஆம் தேதி, கிறிஸ்துமஸ் தினத்தன்று நகரில் யாரேனும் பிச்சைக்காரர்களை கண்டறிந்தால் ரூ.500 பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தகவல் அளிக்க 040-24511791/ 24527846 ஆகிய எண்களை பயன்படுத்தலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*