இலங்கையில் ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்பு

பிறப்பு : - இறப்பு :

இலங்கையில் ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்புகடந்த 2015 மார்ச்சில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றபோது, அந்த நாட்டில், 108 ஆம்புலன்ஸ் சேவையை அமல்படுத்த உறுதி அளித்தார். அதன்படி இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு ரூ.50.81 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. 88 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டன. 600 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த 2016 ஜூலையில் இலங்கையின் மேற்கு, தெற்கு பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. தற்போது ஆம்புலன்ஸ் சேவையை மேலும் 7 பகுதி களுக்கு விரிவுபடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார். இதற்கு இலங்கை அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit