ஈராக்கில் ஒரே நாளில் 38 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

பிறப்பு : - இறப்பு :

தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 38 பேருக்கு ஈராக்கில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈராக் உட்பட முஸ்லிம் நாடுகளில் கொலை, கொள்ளை, தீவிரவாதம், கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 38 பேருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தெற்கு ஈராக்கில் நஸ்ரியா நகரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் 25ம் திகதி 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit