நில மோசடி வழக்கில் கருணாநிதி மகள் செல்வி மீது வழக்கு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

selvi-15-1513319443

நில மோசடி வழக்கில் கருணாநிதி மகள் மீது வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையைச் சேந்த வி.நெடுமாறன், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கருணாநிதியின் மகள் செல்வி, மருமகன் ஜோதிமணி ஆகியோர் தாழம்பூர் கிராமத்தில் ரூ.5 கோடி 14 லட்சம் மதிப்புள்ள 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாக கூறினர்.

எனவே ரூ.3.5 கோடியை முன்பணமாக அளித்தேன். ஆனால் நிலத்தை விற்கவும் இல்லை. முன்பணத்தை திருப்பித் தரவும் இல்லை. மேலும் திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுத்தனர்.

அதுமட்டுமல்லாமல் பூந்தமல்லி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை 2015ல் விசாரித்த உயர்நீதிமன்றம், 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் தன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், விடுவிக்க கோரி செல்வி மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மறுசீராய்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது, வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கருணாநிதி மகள் செல்வி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit