18 ஆண்டுகள் வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை: மனம் திறந்த பிரான்ஸ் பெண்மணி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரான்ஸை சேர்ந்த 60 வயது பெண்மணி 18 வருடங்களாக தனது தந்தையால் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

The Only Girl in the World என பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம் Maude Julien- ன் 18 வருட வாழ்க்கை நினைவுகளை உள்ளடக்கியது.

தற்போது தனது பாட்டியுடன் பாரிஸில் வசித்து வரும் Maude Julien, தான் பிறந்து சுமார் 18 வருடங்களாக வெளி உலக தொடர்பு இன்றி தனது தந்தையால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இப்படி 18 ஆண்டுகள் நான் அனுபவித்த சித்ரவதைகள் தான் தற்போது என்னை ஒரு சூப்பர் பெண்ணாக வாழவைத்துள்ளது.

எனது தந்தை Didier, விரைவில் உலகம் அழியப்போகிறது, இதனால் தீயசக்திகள் ஆட்கொள்ளும் இந்த உலகில் எனது மகள் வாழவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.

அவர் மது அருந்தியதோடு மட்டுமல்லாமல் எனக்கு மது அருந்த கொடுப்பார், எனது அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை ஆசையாக கட்டியணைக்க ஆசைப்பட்டுள்ளேன், ஆனால் எனது தந்தை மனிதர்களை ஒரு போதும் கட்டியணைக்க அனுமதித்ததில்லை.

பூனை, நான் ஆகிய விலங்கினைங்களையே நான் கட்டியணைத்துக்கொள்வேன், நல்ல வேலை அப்போது இந்த விலங்கினங்கள் என்னோடு இல்லையென்றால், நான் அப்போது உயிர்வாழ்ந்திருக்க முடியாது.

எலி நோய்த்தடுப்பு பாதாளத்தில் என்னை அடைத்துவைப்பார், வாரத்திற்கு இருமுறை மின்சார வேலிக்குள் அடைத்துவைத்துவிடுவார்.

இதனால், பைத்தியம் பிடித்தது போன்ற உணர்வு ஏற்படும், மனரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சித்ரவதைகள் செய்தார்.

எனது அப்பாவுடன் சேர்ந்து நானும் மது அருந்தியால் தற்போது எனது கல்லீரல் பாதிப்படைந்துள்ளது.

சுமார், 18 வருடங்கள் எனது தந்தையின் சித்ரவதைக்கு ஆளான நான் அவரிடம் இருந்து தப்பித்து புது உலகத்திற்கு வந்தேன். தற்போது எனக்கு 60 வயதாகிவிட்டது. எனது தந்தை அவரது 79 வயதில் உயிரிழந்தார்.

தற்போது, இந்த சமுதாயத்தில் அதிக மனதைரியத்துடன் வாழ்கிறேன் என்றால் 18 ஆண்டுகள் நான் அனுபவித்த சித்ரவதைகள் எனக்குள் ஒரு முழு ஆளுமையை உருவாக்கியுள்ளது என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*