பெரியபாண்டியன் சமாதியில் நடிகர் கார்த்தி அஞ்சலி

பிறப்பு : - இறப்பு :

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் சமாதியில் நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பெரியபாண்டியன், நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய ராஜஸ்தான் சென்றிருந்தார்.

அங்கு கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது அவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.

அவரது உடலுக்கு முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் அஞ்சலியை செலுத்திய பிறகு அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலியில் முக்கிய தலைவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்ட நிலையில் இன்று(15/12/2017) அவரது சமாதிக்கு சென்ற நடிகர் கார்த்தி மலர்தூவி தன் இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit