பொம்மை கல்யாணம் என ஏமாற்றி 12 வயது சிறுமியை மணந்த நபர்: அதிர்ச்சி சம்பவம்

பிறப்பு : - இறப்பு :

பொம்மை கல்யாணம் செய்வதாக கூறி 12 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தை சேர்ந்த ராஸக் கான் என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து மனைவியின் உறவினரான 12 வயது சிறுமியை மணக்க ராஸக் கான் திட்டம் போட்டார்.

இதையடுத்து சிறுமி வசிக்கும் ராஜஸ்தானுக்கு சென்ற ராஸக், தாய் வழி பாட்டி சிறுமியை பார்க்க விரும்புவதாக கூறி தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் தனது தந்தை ரேயிஸ் ஷா, வழக்கறிஞராக இருக்கும் சகோதரர் அப்துல் மற்றும் ஹாபிஸ் ஜாஹித், அப்சர் அலி ஆகியோர் முன்னிலையில் சிறுமியை ராஸ்க் திருமணம் செய்துள்ளார்.

சிறுமி என்ன நடக்கிறது என கேட்ட போது, நாமெல்லாம் சேர்ந்து பொம்மை கல்யாணம் விளையாட்டு விளையாடுகிறோம் என ராஸக் பொய் கூறியுள்ளார்.

இந்த திருமணம் சட்டபூர்வமாக செல்லாது என்பதால் சிறுமியின் வயது 18 என பொய்யான திருமண சான்றிதழையும் ராஸக் பெற்றுள்ளார்.

திருமணம் குறித்து சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருக்க அவரை 2 மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்திருந்தனர்.

பாட்டியை பார்க்க சென்ற மகள் திரும்ப வராததால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய் ராஸக்கை தொடர்பு கொண்ட போது தான் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் தாய் பொலிசில் புகார் அளிக்க சிறுமியை உடனடியாக மீட்ட பொலிசார் ராஸக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதுடன் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit