முன்னாள் போராளிகள் ஏழு பேருக்கு கடூழிய சிறைத் தண்டனை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வில்பத்து சரணாலயப் பகுதியில் கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஏழு பேருக்கு தலா 8 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் போராளிகளே இந்தத் தண்டனைகளை எதிர்கொண்டுள்ளனர்.

முன்னாள் போராளிகள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார்கள் என்ற அடிப்படையிலேயே குறித்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிமியோன் சந்திரயோகு அலியஸ் என்கிற கிளைமோர் பாக்கியன் ராகவன், சுரேஸ் என்கிற புதியவன் சிறில் ராசமணி, சீராளன் சின்னப்பன் பாக்கியானந்தன் என்கிற ஐயா முத்து மரிக்கார், அப்புல் சலீம் என்கிற சலீம் ஐயா சாந்தன், ஷ்ரெனிஷ் றமேஷ் வள்ளுவன் மற்றும் நடராஜா சரவணபவன் என்கிற சேது ஆகியோருக்கே தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இருப்பினும் விடுதலை செய்யலாம் என ஏமாற்றப்பட்டோ அல்லது சித்திரவதை செய்தோ தான் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர் மனித உரிமைகள் ஆர்வலர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*