ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை! கதி கலங்கிய அமைச்சர்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

maithri20151003-720x450

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்காது, சில முககிய அமைச்சுகளின் செயலாளர்களை அதிரடியாக நேற்று மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், மீன்பிடித்துறை நகர அபிவிருத்தி, சட்டம் மற்றும் ஒழுங்கு, நீதி, அஞ்சல் ஆகியஅமைச்சுகளின் செயலாளர்களை ஜனாதிபதி மாற்றியுள்ளார்.

இதன்காரணமாக அமைச்சர்கள் தமது எதிர்ப்பினை ஜனாதிபதிக்கு தெரிவித்துவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனினும் குறித்த அமைச்சக செயலாளர்கள் மாற்றப்பட்டமைக்கான காரணங்கள் இதுவரையிலும் வெளிப்படுத்தவில்லை.

குறித்த அமைச்சகங்களில் இலங்கை சுதந்திரக்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதி அமைச்சர்களுடன் ஆலோசிக்காமல் இத்தகைய நடடிக்கையினை மேற்கொண்ட விடயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, தேர்தல் காலத்தில் சுதந்திரக்கட்சியை இந்தவிடயம் பாதிக்குமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit