இலங்கை தொடர்..திடீரென மைதானத்திற்கு ஓடி வந்த ரசிகர்: டோனி காலில் விழுந்ததால் பரபரப்பு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

dhoni-vs-fan

மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, ரசிகர் ஒருவர் டோனியின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியின் நடைபெற்றது. இப்போட்டியில் ரோகித் சர்மாவின் இரட்டை சதத்தால், இந்திய அணி நிர்ணயித்த இமாலய இலக்கை இலங்கை அணி எட்ட முடியாமல் பரிதாபமாக தோற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் போது இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் டோனியை நோக்கி ஓடி வந்தார், அதன் பின் டோனியின் காலில் விழுந்து தன் கையில் வைத்திருந்த சிக்ஸர் பேனரை காட்டி ஆட்டோகிராப் கேட்டார்.

உடனடியாக ரசிகர் பின்னாடி ஓடி வந்த பொலிசார் அவரை சமாதானப்படுத்தி மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர்.

என்ன தான் டோனி ஓய்வு குறித்து செய்திகள் வெளிவந்தாலும், அவருக்கு என்று ரசிகள் கூட்டம் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு இந்த ரசிகர் ஒரு சான்று என கூறலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit