இளம் பெண்ணுக்கு தொந்தரவாக இருந்த கரப்பான் பூச்சி: தெருவே கொளுந்து விட்டு எரிந்த பரிதாபம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவில் பெண் ஒருவர் கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தில் உள்ள வீடுகளில் கரப்பான பூச்சி பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முதலில் மருந்து அடித்துள்ளார். அதற்கும் சரிவராததால், தீப்பந்தை வீட்டில் வைத்துள்ளார்.

தீப்பந்தை வைத்த பெண் அதை சரியாக கவனிக்காததால் வீட்டில் தீ பரவியது, அதன் பின் அந்த தீ அப்படியே தெருவில் இருந்த அடுத்தடுத்த வீட்டிற்கு தொடர்ந்து பரவியுள்ளது.

தீ பரவிய சில மணி நேரத்திற்குள் தெருவில் இருந்த சுமார் 10 வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளது, தீ விபத்தை அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைப்பதற்கு சுமார் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்.

இந்த விபத்தால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன், 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்னர்.

மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு தீவிரமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது வீட்டில் இருந்த சேமிப்பு பணம் எரிந்த காரணத்தால் ஒரு கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே தெருவில் இருக்கும் பெண் ஒருவர் இதே போல் கரப்பான பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*