நான்கு ஆண்டுகள் நடந்த பணி: லண்டனில் அதிக பொருட்செலவில் கட்டிடத்தை கட்டி முடித்த அமெரிக்கா

பிறப்பு : - இறப்பு :

உலகிலேயே அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட, தூதரகத்தை அமெரிக்கா லண்டனில் கட்டி முடிந்துள்ளது.

அமெரிக்கா தன்னுடைய தூதரத்தை லண்டனின் தேம்ஸ் ஆற்றங்கரையில் மிகவும் நவீன வசதிகளுடன் கட்டத் துவங்கியது. சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இந்த கட்டிடப் பணி, தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 8 கோடியே 10 லட்சம் பவுண்டிற்கு மேல் செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

12 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம், முழுவதும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கட்டிடத்தின் வெளிப்புற சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் சுட்டெரிக்கும் வெயிலை வாங்கினாலும், கட்டிடத்தின் உள்ளே வெப்பத்தை அனுப்பாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 ஆண்டுகளாக நடந்த கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தக் கட்டிடத்தை திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit