ரஷ்ய தேர்தலில் வெற்றி..அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்தது உண்மையா? புடின் விளக்கம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் பொருளாதார சீர்திருத்தங்களை செய்வதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி புடின் ஆண்டு தோறும் முடிவில் செய்தியாளர்களை சந்திப்பார். அப்போது செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.

அந்த வகையில் இந்தாண்டிற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த வியாழக்கிழமை தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்றுள்ளது, இதில் 1,600-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பேசிய அவர் அடுத்தாண்டு ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது, இத்தேர்தலில் நான் நிற்க முடிவு செய்துள்ளேன்.

அப்படி இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பொருளாதாரத்தை வளப்படுத்தி, புதிய பொருளாதார கொள்கைகளை வகுக்க திட்டமிட்டுள்ளேன். அதுமட்மின்றி பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வருவதுதான் எனது லட்சியம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளின் மேம்பாட்டுக்கு முன்னுரிமையும் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

செய்தியாளர் ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறதே அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ற போது, இதற்கு நான் அப்போதே பதில் அளித்துவிட்டேன், இது ஒரு கற்பனை கலந்த கட்டுக் கதை என தெரிவித்தார்.

மேலும் இந்த தேர்தலில் எந்தக் கட்சியையும் சாராமல், சுதந்திரமான, சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக புடின் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*