வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடு உயர் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

புங்­கு­டு­தீவு மாணவி படு­கொலை வழக்­கில் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்ட 7 குற்­ற­வா­ளி­கள் சார்­பில் முன்­வைக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு மனு­வுக்கு அமை­வாக, தீர்ப்­பா­யத்­தால் நடத்­தப்­பட்ட மூல வழக்­கே­டு­கள் மற்­றும் அதன் பிர­தி­கள் உயர் நீதி­மன்­றில் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டன.

யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றப் பதி­வா­ளர் திரு­மதி மீரா வடி­வேற்­க­ர­சன் மற்­றும் உத்­தி­யோ­கத்­தர்­கள் நேரில் சென்று வழக்கு ஆவ­ணங்­களை உயர் நீதி­மன்­றப் பிர­திப் பதி­வா­ளர் சட்­டத்­த­ரணி கிரி­ஷானி டி கோத்­த­கொ­ட­யி­டம் நேற்­றுக் கைய­ளித்­த­னர்.

புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நா­தன் வித்­தியா 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கூட்டு வன்­பு­ணர்­வின் பின் கொடூ­ர­மா­கப் படு­கொலை செய்­யப்­பட்­டார்.

இந்­தப் படு­கொலை வழக்கை மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் ஆகி­யோர் அடங்­கிய சிறப்­புத் தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்) விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது.

விசா­ர­ணை­க­ளின் நிறை­வில் கடந்த செப்­ரெம்­பர் 28ஆம் திகதி 9 எதி­ரி­க­ளில் 7 பேர் கொலைக் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்டு அவர்­க­ளுக்கு தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கூட்டு வன்­பு­ணர்வு மற்­றும் சதித்­திட்­டம் தீட்­டி­யமை ஆகிய குற்­றங்­க­ளுக்கு 7 குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் 30 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­பா­யம் தீர்ப்­ப­ளித்­தது. 2 பேர் நிர­ப­ரா­தி­கள் என விடு­விக்­கப்­பட்­ட­னர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*