தினமும் 13 லிட்டர் கோகோ கோலா குடித்தவரின் நிலை என்ன தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

21 வயது இளைஞர் ஒருவர் தினமும் அதிக அளவில் கோகோ-கோலா குளிர்பானத்தை குடித்து வந்ததால் உடல் பருமன் அதிகரித்து, பல இன்னல்களுக்கு ஆளாகி தற்போது அந்த பழக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார்.

ஷேன் டிரென்ச் என்னும் இளைஞர் தீவிர கோகோ-கோலா பிரியர் ஆவார். அதனால், தினமும் 40 கேன் கோகோ-கோலாவை குடித்து வந்தார். அதாவது, 13 லிட்டர்.

குடிப்பதற்கு தண்ணீருக்கு பதிலாக அவர், கோலாவையே பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும், சமையலுக்கு கூட அதையே பெருமளவில் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக அவரின் உடல் எடை கூடி, 203 கிலோவைத் தொட்டது.

உடல் பருமன் காரணமாக இவரால் நடப்பதும், நீண்ட நேரம் நிற்பதும் மிக கடினமானது. இதனைத் தொடர்ந்து, ஷேன் மருத்துவரை அணுகியுள்ளார்.

இவரை முழுவதுமாக பரிசோதித்த மருத்துவர்கள், கோலா குடிப்பதை இப்படியே தொடர்ந்தால் ஷேன் சில நாட்களில் இறந்து விடுவார் என தெரிவித்துள்ளனர்.

இதனால் பயந்து போன ஷேன், கோலா குடிப்பதை நிறுத்த நினைத்தார். ஆனால் அதன் சுவை அவருக்கு பழகிவிட்டதால் அவரால் நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில் சர்க்கரை சேர்க்கப்படாத கோகோ-கோலா ஸீரோ-வை அவர் குடிக்க ஆரம்பித்தார்.

625-0-560-350-160-300-053-800-668-160-90-10

அதன் விளைவாக அவரின் உடல் எடையில் 69 கிலோ குறைந்தது. அதன் பின்னர், கோலா குடிப்பதை முற்றிலுமாக நிறுத்தினார்.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு, ஷேன் இரைப்பையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட ஷேன், அறுவை சிகிச்சை இல்லாமலே தனது எடையை 127 கிலோவிற்கு குறைத்தார். தற்போது 100 கிலோவிற்கு எடையை குறைப்பதே தனது இலக்கு என கூறியுள்ளார் ஷேன்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit