சவுதி கணவனுக்கு சர்ப்பரைஸ் கொடுத்த புதுப்பெண்: விவாகரத்து செய்த கணவன்

பிறப்பு : - இறப்பு :

சவுதியில் கணவர் பிறந்தநாளுக்கு மனைவி சர்ப்பரைஸ் கொடுக்க முயன்ற நிலையில் அது தவறாகி போனதில் மனைவியை கணவர் விவாகரத்து செய்திருக்கும் சம்பவம் நடந்துள்ளது.

அந்நாட்டின் Ain Al Youm பத்திரிக்கை தான் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது

சவுதியின் அல் கெர்ஜ் நகரில் புது மண தம்பதி வாழ்ந்து வருகிறார்கள், அதில் கணவருக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்துள்ளது.

இதையடுத்து அவருக்கு சர்ப்பரைஸ் கொடுக்க நினைத்த மனைவி கணவருக்கு பிடித்த உணவுகளை வாங்க டாக்ஸியில் ஹொட்டலுக்கு சென்றுள்ளார்.

உணவு வாங்கி விட்டு வீட்டுக்கு வரும் வரும் போது டாக்ஸி பழுதாகி சாலையில் நின்றுள்ளது.

இந்த சமயத்தில் அப்பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்து தனது மனைவியை தேடியுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து மனைவி வீட்டுக்கு வந்த போது அவர் மீது கோபம் கொண்ட கணவர் மனைவியை தாய் வீட்டில் சென்று விட்டதோடு அவரிடம் விவாகரத்தும் வாங்கியுள்ளார்.

இது குறித்த செய்தி சமுகவலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இணைய பயன்பாட்டாளர்கள் இந்த வினோத சம்பவம் குறித்து பல்வேறு விதமான கருத்துகளை கூறி வருகிறார்கள்.

இந்தாண்டு தொடக்கத்தில், மனைவி தனக்கு செய்து கொடுத்த உணவில் ஆட்டு தலையை வைக்க மறந்துவிட்டதாக கூறி அவரை கணவர் ஒருவர் விவாகரத்து செய்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit