நடுவானில் கடிபட்ட பயணிகள்: தரையிறக்கப்பட்ட விமானம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவின் JetBlue என்ற விமானத்தில் பயணித்த இரு பயணிகள் சண்டையிட்டுக்கொண்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Los Angeles நகரில் இருந்து New York நகரத்திற்கு JetBlue விமானம் பயணித்துக்கொண்டிருந்தது, அப்போது Tom என்ற பயணிக்கு தனது அருகில் அமர்ந்திருந்த சக பயணியுடன் சண்டை ஏற்பட்டுள்ளது.

சண்டை தீவிரமடைந்ததில், Tom- யின் இரு கைகளையும் இழுத்து இறுக பிடித்துக்கொண்ட சக பயணி அவரை பயங்கரமாக கடித்து வைத்துள்ளார். இதில் வலி தாங்க முடியாத Tom விமானத்தில் வைத்து அலறியுள்ளார்.

இவருக்கு உதவி செய்ய வந்த மருத்துவரையும் அந்த பயணி தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத பயணி உடனடியாக விமானத்தை நிறுத்துங்கள் என கூறியுள்ளார், இதனைத் தொடர்ந்து விமானம் Los Angeles – இல் தரையிறக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயணிக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது, சில மணிநேர தாமதத்திற்கு பின்னர் விமானம் நியூயோர்க் புறப்பட்டு சென்றது.

ஆனால் இந்த சண்டைக்கு காரணமான நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*