எச் – 1பி விசா உள்ளவர்களுக்கு அமெரிக்க அரசு புது சலுகை

பிறப்பு : - இறப்பு :

‘எச் – 1பி விசா வைத்திருப்பவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றலாம்’ என, அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, எச் – 1பி விசா வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 65 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது.உலக அளவில் இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், நம் நாடு முன்னணியில் உள்ளது.இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:எச் – 1பி விசா பெற்றுள்ளவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றலாம். ஆனால், அந்த நிறுவனங்களின் அனுமதியைப் பெற வேண்டும். இதற்காக, ஐ – 129 என்ற விண்ணப்பத்தை, விசா பெறும்போது தர வேண்டும்.இது ஏற்கனவே உள்ள நடைமுறை தான். ஆனால், பலருக்கும் இது குறித்து தெரியவில்லை. அதனால், இனி, எச் – 1பி விசா பெறும்போதே, இந்த விண்ணப்பத்தையும் இணைக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit