திருச்செந்தூர் கோவில் விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலியானார் மற்றும் 2 பேர் படுகாயமடைந்தனர். தற்போது இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரணம் உதவிகளை அறிவித்துள்ளார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வடக்குப் பிராகாரத்தில் அமைந்திருக்கும் வள்ளிக்குகை அருகில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை காலை 10.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டது. இன்று நடைபெற இருந்த பூஜைகளும் ரத்துசெய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த பேச்சியம்மாள் என்பவற்றின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரண உதவியும், படுகாயமடைந்த மற்ற இருவருக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு இடிபாடுகளை அகற்றும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*