மோடி காரில் போனது தப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிறப்பு : - இறப்பு :

குஜராத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்துவிட்டு காரில் ஊர்வலமாகச் சென்றது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மதியம் 12 மணி அளவில் பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். பின்னர், காரில் ஊர்வலமாகச் சென்றார்.

மோடி இவ்வாறு காரில் பிரச்சாரப் பயணம் போல ஊர்வலமகாச் சென்றது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் மீறல் என்று காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம் பிறரால் ஆட்டிவைக்கப்படும் கைப்பாவையாக இருப்பதை இந்த சம்பவம் நிரூபித்துவிட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit