மத்திய அமைச்சர் சென்ற விமானம் தாமதம்; 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மத்திய அமைச்சர்கள் சென்ற விமானம் தாமதமானதால், 3 ஊழியர்களை ஏர் இந்தியா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

நேற்று டெல்லியில் இருந்து விஜயவாடாவுக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில், 125 பயணிகள் அமர்ந்திருந்தனர். கூடவே, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவும் அந்த விமானத்தில் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில், புறப்பட வேண்டிய நேரத்தைத் தாண்டி சுமார் ஒரு மணி நேரம் ஆன பின்பும் விமானம் இயக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவனத்தை குற்றம் சாட்டியதோடு, மத்திய அமைச்சரையும் சூழ்ந்தனர்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் நேரடியைாக ஏர் இந்தியாவின் தலைவர் பிரதீப் கரோலாவை தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு பின்பு தான் விமானம் கிளம்பியது. இருந்த போதிலும், சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமானதால், தக்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அசோக்கிடம் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து அமைச்சரின் உத்தரவுபடி, ஏர் இந்தியா விமானம் விசாரணை நடத்தி, 3 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

வானிலை சரியாக இல்லாத காரணித்தினால் தான், விமானம் இயக்க தாமதமானதாகவும் ஆனால், இது பற்றி ஊழியர்களிடம் சரியாக தெரிவிக்காததால், இந்த சம்பவம் நடந்ததாகவும் செய்திகள் வந்தன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*