குழிக்குள் விழுந்து பரிதவித்த குட்டி யானை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

saving elephant

கோவையில் வாய்க்காலுக்குள் விழுந்த குட்டியானையை, வனத்துறையினர் மீட்டு அதன் தாயுடன் சேர்த்த சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில், சாலையோரம் செல்பவர்களை பெண் யானை ஒன்று விரட்டியபடி இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து யானையை நெல்லிமலை காட்டுக்குள் விரட்டினர்.

எனினும் அந்த யானை மீண்டும் சாலைப்பகுதிக்கே வந்து துரத்துவதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் கண்காணித்ததில், குட்டியானை ஒன்று பழைய வாய்க்காலுக்குள் விழுந்திருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அந்த குட்டியானையை உடனடியாக மீட்ட வனத்துறையினர், அதற்கு தண்ணீர், இளநீர் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றை அளித்தனர்.

பின்னர் வனத்துறையை சேர்ந்த ஒருவர் தன் தோளிலேயே, அந்த குட்டியானையை தூக்கிச் சென்று வனப்பகுதியில் விட்டு வந்தார்.

மேலும் தாயுடன் அந்த குட்டியானை சேர்ந்து விட்டதா என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் நேற்று மாலை குட்டி யானை தனது தாயுடன் இணைந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit